டிரெண்டிங்

ஸ்டாலின் முதல்வராகும் நாள் தொலைவில் இல்லை: வைகோ

ஸ்டாலின் முதல்வராகும் நாள் தொலைவில் இல்லை: வைகோ

webteam

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழகத்தின் முதல்வர் என்று அழைக்கும் நாள் தொலைவில் இல்லை என்று‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டாலின் தமிழக முதல்வராவது நிச்சயம் என்றும், தமிழகத்தில் நடைபெறுவது முதலமைச்சர் ஆட்சியா, ஆளுநரின் ஆட்சியா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அதிமுக அரசு கொத்தடிமை கூட்டமாக உள்ளது என்று கூறிய அவர், பெரியார், அண்ணா வாழ்ந்த பூமியில் மதவாத சக்தியை அனுமதிக்கக் கூடாது என்று பேசினார். அத்துடன் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக அழைக்கக் கூடிய காலம் வெகு விரைவில் வரும் என்றும் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.