டிரெண்டிங்

பொதுக்கூட்ட மேடையில் மயங்கி விழுந்த வைகோ

பொதுக்கூட்ட மேடையில் மயங்கி விழுந்த வைகோ

webteam

கதிராமங்கலத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேடையிலேயே மயங்கி விழுந்தார். 

காலை 11 மணியளவில் தொடங்கிய பொதுக்கூட்டம் 3 மணி வரை நிறைவடையவில்லை. அதனால், சேர்வுடன் காணப்பட்ட வைகோ, மேடையில் பேசுவதற்காக எழுந்த போது மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் உதவியுடன் எழுந்த வைகோ தண்ணீர் குடித்துவிட்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். கதிராமங்கலத்தை விட்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.