டிரெண்டிங்

தமிழகத்திற்கு பச்சைத் தூரோகம்: மத்திய அரசு மீது வைகோ குற்றச்சாட்டு

தமிழகத்திற்கு பச்சைத் தூரோகம்: மத்திய அரசு மீது வைகோ குற்றச்சாட்டு

webteam

காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கர்நாடகத்தின் வஞ்சகத்திற்கு ம‌த்திய அரசு துணைபோகக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி‌ல், மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்க‌ளில் அணை கட்ட மத்திய அரசு மறைமு‌கமாக அனுமதி வழங்கி சதி செய்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைக்காமல் தமிழகத்திற்கு ம‌த்திய அரசு பச்சைத் தூரோகம் இழைத்து வருகிறது.  கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தில் விவசாயம் அழிந்து, பசியும், பஞ்சமும் தலைவிரித்து ஆடும் ஆபத்து உருவாகும் என்று வைகோ கவலை தெரிவித்தார்.