டிரெண்டிங்

12 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா அறிவாலயத்தில் வைகோ

12 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா அறிவாலயத்தில் வைகோ

rajakannan

2006ஆம் ஆண்டுக்குப் பிறகு வைகோ முதன்முறையாக அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக, கடந்த 29-ம் தேதி, தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதை தொடர்ந்து, அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் தமி‌ழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

2006ஆம் ஆண்டுக்கு பிறகு வைகோ முதன்முறையாக அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்தார். கூட்டத்தின் முடிவில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், பேருந்து கட்டணத்தை திரும்பப்பெற மறுத்து வரும் அரசைக்கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வ‌ரும் 13‌ஆம் தேதி மாபெரும் கண்டனப் ‌பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்த வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த சம்பளத்தொகையை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் எனக் கோருவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.