டிரெண்டிங்

‘பசுவை தடவி விட்டால் சுவாச பிரச்னை குணமாகும்’ - உத்தரகண்ட் முதல்வர் ராவத்

rajakannan

பசுக்களை தடவி விட்டால் நம்முடைய சுவாச பிரச்னைகள் சரியாகும் என்று உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ராவத் நேற்று பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஆக்ஸிஜனை உள்வாங்கி வெளியிடும் ஒரே விலங்காக பசு மட்டும்தான் உள்ளது. பசுவை தடவி விட்டால் சுவாச பிரச்னைகள் சரி ஆகும். பசுக்களுடன் நெருக்கமாக வாழ்ந்தால் காசநோய் சிக்கலை சரி செய்யும்” என்று கூறியிருந்தார்.

அத்துடன், ‘பசுக்கள் 80 சதவித ஆக்ஸிஜனை வெளியிடுவதாக இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சாதாரண மனிதர்கள் வெளியிடும் ஆக்ஸிஜன் 6-7 அடி தூரம் வரைதான் செல்லும், ஆனால், பசுக்கள் வெளியிடும் ஆக்ஸிஜன் 42 அடி தூரம் வரை இருக்கும். இது எங்களது நம்பிக்கை’ என்று அவர் தெரிவித்துள்ளார்.  

முன்னதாக, 2017 ஆம் ஆண்டு ராஜஸ்தான் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் வசுதேவ் தேவ்னனி கூறியிருந்தார்.