petrol wash pt desk
டிரெண்டிங்

இன்ஸ்டாகிராம் மோகம்: பெட்ரோல் ஊற்றி பைக்கை கழுவிய இளைஞர் கைது #ViralVideo

இன்ஸ்டாகிராமில் பிரபலமாவதற்காக தனது இருசக்கர வாகன்ததை பெட்ரோலால் கழுவிய உத்தரப்பிரதேச இளைஞர் கைது செய்யப்பட்டார்.

webteam

அசன்பூரில் உள்ள பங்கிற்குச் சென்ற இளைஞரொருவர், அங்கு வாங்கிய பெட்ரோலைக் கொண்டு வாகனத்தை கழுவியுள்ளார். இந்த செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இளைஞரை கண்டித்து அனுப்பினர். இந்த சம்பவத்தை இளைஞரின் நண்பர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். மேலும் அவரது புல்லட் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.