உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் சமாஜவாதி கட்சி வேட்பாளர் கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. &
சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் உத்தரப்பிரதேசத்தில், 6வது கட்ட தேர்தல் மார்ச் 4ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விறுவிறுப்பான பிரச்சாரத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஈடுபட்டுள்ளார்.
கிழக்கு உத்தரப் பிரதேசம், தியோரியாவில் உள்ள பர்ஹாஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ் மோடியை தாக்கியும் அந்த தொகுதியில் தன் கட்சியின் சார்பில் போட்டியிடும் பி.டி.திவாரியை புகழ்ந்தும் பேசினார்.
இதன் பிறகு மேடையில் பேச வந்த பி.டி.திவாரி, கதறி அழ தொடங்கினார். அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்த அவரது ஆதரவாளர்கள், மேடையில் இருந்து அவரை அழைத்து சென்றனர்.
சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக திவாரி அறிவிக்கப்பட்டாலும் கட்சிக்குள் அவரை சிலர் எதிர்த்து வருவதாகவும் அதனால் உணர்ச்சி வசப்பட்டு அவர் அழுததாகவும் கூறப்படுகிறது.