டிரெண்டிங்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - கோவைக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளர் நியமனம்

Veeramani

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கோவைக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளராக நாகராஜன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

நாளை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், கோவைக்கு சிறப்பு தேர்தல் அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.நாகராஜனை நியமித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம்

மேலும், கோவையில் தங்கியிருந்த வெளியூர் நபர்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்தாகவும், கோவை நகர்ப் பகுதியில் மட்டும் 2,723 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்

முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்தவும், வெளியூரில் இருந்து அழைத்துவரப்பட்ட திமுகவினை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோவை ஆட்சியர் வளாகத்தில் அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரிடம் மாவட்ட ஆட்சியர் சமீரன், காவல் ஆணையர் ஜெயசந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை.

போராட்டத்தைத் தொடர்ந்தால் கைது செய்வோம் என காவல்துறையினர் எச்சரித்தும் அவர்கள் கலைந்துசெல்ல மறுத்தனர். இதையடுத்து எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்