தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், பாஜக அதிமுக இடையே இடப்பங்கீடு விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் அதிமுக சார்பாக போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில், கடலூர் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், கடலூர் கிழக்கு, வடக்கு, மேற்கு விழுப்புரம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள் என ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் கூட்டாக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு.

மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சிமன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள் - முதல் பட்டியல் 1/4 pic.twitter.com/jWB0vjVeSE
— AIADMK (@AIADMKOfficial) January 30, 2022