நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தி.மு.க, அதிமுக கட்சிகள் பணத்தை வாரி இறைப்பதை மாநில தேர்தல் ஆணையமும், காவல்துறையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக தினகரன் பதிவிட்டுள்ள ட்வீட்டில் , "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் ஓய்ந்தவுடன் நேற்று மாலையிலிருந்து தமிழகம் முழுவதும் பணமழை ஆறாக ஓடுவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில், ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் தி.மு.க மற்றும் பழனிசாமி கம்பெனிகள் பணத்தை வாரி இறைப்பதை மாநில தேர்தல் ஆணையமும், காவல்துறையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது" என தெரிவித்துள்ளார்