உத்தரப்பிரதேச மாநிலத்தின் 16 மேயர் பதவிகளுக்கான தேர்தலில் 14 இடங்களில் பாஜகவும், 2 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 16 பெருநகரங்கள், 198 நகரசபைகள், 438 பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்றன. அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட நிலையில் அயோத்தி, மதுரா-பிருந்தாவனம், மொராதாபாத், கான்பூர், பிரோஸாபாத், வாரணாசி, கோரக்பூர், லக்னோ, சஹரான்பூர், ஜான்சி, அலகாபாத், ஆக்ரா, காசியாபாத், பரேலி ஆகிய 14 பெருநகரங்களின் மேயர் பதவிகளை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.
மீரட் மற்றும் அலிகார் பெருநகரங்களின் 2 மேயர் பதவிகளை மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் பிடித்துள்ளனர். சமாஜ்வாதி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் மேயர் பதவிக்கான ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.