டிரெண்டிங்

சொதப்பிய அம்பயர் ! பறிபோன பஞ்சாப்பின் வெற்றி

சொதப்பிய அம்பயர் ! பறிபோன பஞ்சாப்பின் வெற்றி

jagadeesh

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் தோல்விக்கு அம்பயரின் தவறும் காரணமாகிப் போனது தெரியவந்துள்ளது.

பஞ்சாப் அணிக்கு 19ஆவது ஓவரை டெல்லி வீரர் காகிசோ ரபாடா வீசினார். அப்போது ஒரு பந்தை பஞ்சாப் வீரர் ஜோர்டான் லாங் ஆன் திசையில் தட்டி விட்டு 2 ரன்கள் எடுத்தார். அப்போது அவர் பேட்டை சரியாக கிரீசுக்குள் வைத்த போதும் அவர் வெளியே வைத்து விட்டதாக கருதி அம்பயர் நிதின் மேனன் ஒரு ரன்னை குறைத்துவிட்டார்.

இந்த ரன் பஞ்சாப் அணியின் கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த அணி 20 ஓவருக்குள்ளேயே வெற்றி பெற்றிருக்கும். ஆட்டத்தின் முடிவு தலைகீழாக மாறியிருக்கும். தவறான முடிவை கொடுத்த அம்பயர் நிதின் மேனனை முன்னாள் வீரர் சேவாக் உள்ளிட்டோர் குறை கூறியுள்ளனர். இது போன்ற நேரங்களில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மற்ற சில வீரர்கள் கருத்து கூறியுள்ளனர்.

அம்பயர் நிதின் மேனன் அண்மையில்தான் ஐசிசியின் எலைட் குழுவில் சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.