டிரெண்டிங்

கட்சிக்காரர் குழந்தைக்கு ‘செந்தாமரை’ எனப் பெயர் சூட்டிய உதயநிதி

கட்சிக்காரர் குழந்தைக்கு ‘செந்தாமரை’ எனப் பெயர் சூட்டிய உதயநிதி

Rasus

திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த உதயநிதி ஸ்டாலின், கட்சி பிரமுகர் ஒருவரின் குழந்தைக்கு செந்தாமரை எனப் பெயர் சூட்டினார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. திமுகவிற்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவரான ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி இன்று திருவள்ளூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஜெயகுமாரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.

திருவேற்காடு, பூந்தமல்லி, திருமழிசை, திருவள்ளூர், தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மக்களின் முன்நின்று பேசிய உதயநிதி ஸ்டாலின் வாக்குகளை சேகரித்தார். அப்போது திருவள்ளூர் தேரடி பகுதியில் பரப்புரை செய்த உதயநிதி, திமுக பிரமுகர் ஒருவரின் குழந்தைக்கு செந்தாமரை என பெயர் சூட்டினார்.