சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அதிமுகவை தொடர்ந்து திமுக தமது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து அதிமுக கூட்டணி கட்சியான பாமகவின் சார்பில் ஏ.வி.ஏ கஸ்ஸாலி போட்டியிடுகிறார். உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காண உள்ளது கவனத்துக்குரியது.