டிரெண்டிங்

அரசு விழாவா? அரசியல் மேடையா? திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கண்டனம்

அரசு விழாவா? அரசியல் மேடையா? திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கண்டனம்

webteam

அரசு விழாக்களை அரசியல் மேடையாக்குவதாக திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்திற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, தொகுதிகள் காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியிடப்பட்ட சூழலில், இன்று பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு தீர்மானத்தில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆளுநர், சபாநாயகர், முதல்வர் ஆகியோர் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுவதாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு விழாக்களை திமுகவை விமர்சிக்கும் அரசியல் மேடையாக்குவதாகக் கூறி தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதாக மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் இன்று சென்னை வருகை தந்துள்ளார். எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அடுத்த நகர்வை திமுக முன்னெடுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.