இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவின் சின்னமான இரட்டை சின்னத்திற்கு ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பில் போட்டி ஏற்பட்டது. இதனையடுத்து இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்கள் இரு அணிகள் சார்பிலும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஓபிஎஸ் ஈபிஎஸ் இணைந்தனர். டிடிவி தினகரன் தலைமையில் தனி அணி உருவானது.
இந்தநிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை அக்டோடர் 6-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக அக்டோபர் 5-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது ஒருநாள் தாமதமாக அக்டோபர் 6-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோருக்குத் தேர்தல் ஆணையம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.