டிரெண்டிங்

இரட்டை இலை வழக்கு: தினகரன் தரப்பு எழுத்துப்பூர்வ வாதம் இன்று தாக்கல்

இரட்டை இலை வழக்கு: தினகரன் தரப்பு எழுத்துப்பூர்வ வாதம் இன்று தாக்கல்

webteam

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், டிடிவி தினகரன் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தேர்தல் ஆணையத்தில் இன்று சமர்பிக்கப்படவுள்ளன. 

தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை வழக்கில் இறுதிவாதம் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் தரப்பின் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தினகரன் தரப்பினர் தாக்கல் செய்கின்றனர். இதற்காக டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். முன்னதாக இரட்டை இலைச் சின்ன வழக்கில் இனி விசாரணை நடைபெறாது என்றும் வாதங்கள் ஏதேனும் இருப்பின் திங்கள் கிழமைக்குள் எழுத்து மூலம் சமர்ப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது