டிரெண்டிங்

இரட்டை இலை இழுபறி: தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் விசாரணை

இரட்டை இலை இழுபறி: தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் விசாரணை

webteam

இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற உள்ளது. 

முன்னதாக இவ்வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 23ம் தேதி நடைபெற்றது. டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையின்போது முதலமைச்சர், துணை முதலமைச்சர் சார்பில் வைத்தியநாதன் ஆஜரானார். தினகரன் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, மாத்தூர் உள்ளிட்டோர் ஆஜராகினர். அப்போது முதல்வர், துணை முதல்வர் தரப்பிலான பிரமாண பத்திரங்களில் 300 போலி என மாத்தூர் வாதம் செய்தார். சசிகலா தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் என்றும் எனவே அவர் கட்சிக்கு தலைமை தாங்க முடியாது என்றும் வைத்தியநாதன் வாதம் செய்தார். கட்சியிலும், ஆட்சியிலும் முதல்வர் தலைமைக்கே பெரும்பான்மை உள்ளது என்றும் வைத்தியநாதன் குறிப்பிட்டார். 

கட்சியில் பெரும்பான்மை இருப்பதற்கு சையது அலி வழக்கின் 28, 30ஆவது பாராவை முதல்வர் அணி சுட்டிக்காட்டியது.‌ பிரமாண பத்திரங்களுடன் ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட நகல் சான்றுகள் இணைத்துள்ளோம் என்று துணை முதல்வர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. தாக்கல் செய்துள்ள 1877 பிரமாண பத்திரங்களும் தங்களுக்கு வலுவான ஆதாரங்கள் என ஓபிஎஸ் தரப்பில் குறிப்பிடப்பட்டது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.