இரட்டை இலைச் சின்னம் டிடிவி அணிக்குத்தான் என்று டிடிவி ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் கூறினார்.
தமிழக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுகவின் 46ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தினகரன் அணி சார்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தங்கதமிழ்செல்வன், தங்களுக்குதான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்றும், ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்றும் கூறினார்.