டிரெண்டிங்

குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் : நீரில் மூழ்கிய துயரம்

குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் : நீரில் மூழ்கிய துயரம்

webteam

காஞ்சிபுரத்தில் பெரியோர் யாருமின்றி குளத்தில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அருகேயுள்ள முசரவாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவரின் மகன் ஜெகத்பிரியன் (8). அதேபகுதியில் ரோட்டுத்தெரு சோமு என்பவரின் மகன் சுஜன் (12).

இந்த இரண்டு சிறுவர்களும் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். ஆனால் இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் சிறுவர்களின் சடலங்களையும் மீட்டு காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் பாலு செட்டி சத்திரம் காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.