டிரெண்டிங்

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மெரினாவில் தியானம்

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மெரினாவில் தியானம்

webteam

டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் செய்து வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் பழனியப்பன், செந்தில்பாலாஜி, முத்தையா, கோதண்டபாணி, ரெங்கசாமி, வெற்றிவேல், தங்கத்தமிழ்ச்செல்வன், முருகன், மாரியப்பன் கென்னடி, தங்கதுரை, பாலசுப்ரமணியன், ஜெயந்தி, பார்த்திபன், சுப்பிரமணியன், ஜக்கையன், சுந்தர்ராஜ், கதிர்காமு, ஏழுமலை ஆகிய 18 எம்எல்ஏ-க்கள் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுகவின் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைந்ததைத் தொடர்ந்து டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது. சட்டப்பேரவையில் ஒருவேளை மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏ-க்கள், ஆட்சி நீடிக்க பெரும் சவாலாக இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேசும்போதும், இணைந்த அணிகளால் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற முடியாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.