டிரெண்டிங்

ஆளுநருடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சந்திப்பு!

ஆளுநருடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சந்திப்பு!

webteam

ஆளுநர் வித்யாசாகர் ராவை, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று காலை சந்தித்தனர்.

 அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள், சென்னையில் உள்ள அவர் இல்லத்தில் இன்று காலையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். செந்தில் பாலாஜி, ரெங்கசாமி, கென்னடி மாரியப்பன், முருகன், தங்கதுரை, பார்த்திபன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். நேற்று 18 எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் விளாத்திக்குளம் எம்.எல்.ஏ உமா மகேஸ்வரி இன்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்றனர். ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசி வருகின்றனர். அவரிடம் அறிக்கை ஒன்றை அவர்கள் கொடுத்துள்ளனர்.