டிரெண்டிங்

எடப்பாடி பழனிசாமி கட்சிப் பதவி பறிப்பு: தினகரன் அதிரடி

எடப்பாடி பழனிசாமி கட்சிப் பதவி பறிப்பு: தினகரன் அதிரடி

webteam

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

அதிமுகவின் 19 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்ஸில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் டிடிவி. தினகரன், அதிரடி நடவடிக்கையாக கட்சி பொறுப்பில் உள்ளவர்களின் பதவியை பறித்து வருகிறார். அவர்களுக்குப் பதிலாக, வேறு நபர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்படுவதாக தினகரன் அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.கே.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு பொதுச்செயலாளர் சசிகலா ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது என டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.