டிரெண்டிங்

தீவிர ஆலோசனையில் டிடிவி தினகரன் அணியினர்

தீவிர ஆலோசனையில் டிடிவி தினகரன் அணியினர்

webteam

ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணையுள்ள நிலையில், மூன்றாம் அணியாக கருதப்படும் டிடிவி தினகரன் அணியினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

சென்னை அடையாற்றில் உள்ள வீட்டில் தினகரன் இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், முத்தையா, கோதண்டபாணி, அரூர் முருகன், மாரியப்பன் கென்னடி, தங்க தமிழ்ச்செல்வன், தங்கதுரை, பாலசுப்ரமணியன், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர். இதில் 16 எம்.எல்.ஏக்கள் கலந்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணையுள்ள நிலையில், மூன்றாம் அணியாக கருதப்படும் டிடிவி தினகரன் அணியினர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த தினகரன், தங்களுடைய ஆதரவாளர்கள் ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் அணியில் ஸ்லீப்பர் செல்களாக உள்ளதாகவும் தேவைப்படும் போது அவர்கள் வெளியே வந்து தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் தினகரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.