ஜெயலலிதா நியமித்த சபாநாயகருக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ், இன்று யோக்கிய சிகாமணி ஆகிவிட்டது போல பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.
டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், “ஜெயலலிதா நியமித்த சபாநாயகருக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ், இன்று யோக்கிய சிகாமணி ஆகிவிட்டது மாதிரி பேச்சுவார்த்தை நாடகத்தை நடத்துகிறார்” என்றார்.
மேலும் இதுகுறித்து பேசிய சம்பத், “அர்ப்பத்தனமான பதவிகளுக்காகவும், அதிகார பீடத்தில் ஆதாயங்களை தேடிக்கொள்வதற்காகவும் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் எந்த முடிவு எடுத்தாலும், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிற வல்லமை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு இருக்கிறது என்பதை வருகிற நாட்களில் நாங்கள் நிரூபிப்போம்” என்று கூறினார்.