டிரெண்டிங்

டிடிவி தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து

டிடிவி தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து

webteam

கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்‌.கே.நகர் இடைத்தேர்தலில் ‌சுயேச்சையாக களம் கண்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து ‌போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் கூடுதலாக தினகரன் பெற்றார். மதுசூதனனை தவிர, திமுக வேட்பாளர் மருதுகணேஷ் உள்ளிட்ட களத்தில் நின்ற 57 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். 

இந்நிலையில் நாளை உலகம் முழுவதும் கொண்டாடவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில், கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஆர்.கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என அறிக்கையில் குறிப்பிட்டு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.