ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவினர் சரியாக செயல்பட்டிருந்தால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும் என டிடிவி தினகரன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆர்.கே.நகர் தேர்தலின் போது போலீஸை பயன்படுத்தியும், ரூ.160 கோடி செலவு செய்து வாக்குக்கு ரூ.6,000 கொடுத்து தோற்றவர்கள் அதிமுகவினர். தோற்றுவிட்டு தற்போது நான் முறைகேடு செய்ததாக குற்றம் சுமத்துகிறார்கள். இதுவரை தமிழக இடைத்தேர்தலில் வெற்றி பெற்று வந்த ஆளும் கட்சியினர் தோல்வியடைந்துள்ளனர். மக்கள் கொஞ்சம் சிந்தித்து இருந்தாலும் அல்லது திமுக சரியாக செயல்பட்டிருந்தாலும் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும். ஆளும் கட்சியினர் பணத்தை கொடுத்து யாரையும் வாங்கி விட முடியும் என நினைக்கிறார்கள். ஆனால் மக்களை வாங்க முடியாது” என்று தினகரன் கூறினார்.