சட்டப்பேரவையில் டிடிவி.தினகரனை மூட்டைபூச்சியை போல் நசுக்குவோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு டிடிவி.தினகரன் ஜெயக்குமார் ஒரு டெங்கு கொசு என விமர்சித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், டி.டி.வி.தினகரனால் எந்த நெருக்கடியும் இல்லை. மூட்டை பூச்சிக்கெல்லாம் அதிமுக பயப்படாது. சட்டப்பேரவையில் டிடிவி.தினகரனை மூட்டைபூச்சியை போல் நசுக்குவோம் என்று கூறியிருந்தார்.
அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிடிவி தினகரன், ஜெயக்குமாரின் பகுதியிலேயே வெற்றி பெற்றுவிட்டோம். அவர்கள் காயிலாங்கடைக்கு போகும் நிலையில் உள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார் ஒரு செங்கு கொசு என்று பதிலடி கொடுத்தார்.