டிரெண்டிங்

இருபது ரூபாய் கொடுத்து கடன் சொன்னால் மக்கள் வாக்களிப்பார்களா?: தினகரன்

webteam

ஆர்.கே நகர் தோல்வி விரக்தியில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தன் மீது குற்றச்சாட்டுகளை கூறுவதாக டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.

டிடிவி தினகரன் மாயம் செய்து ஆர்.கே நகர் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுவிட்டதாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் இன்று விமர்சித்திருந்தனர். இன்று அடையாற்றில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “என்னை மாயமான் என ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூறுகின்றனர். உண்மையில் இரட்டை இலை மற்றும் அதிமுக கட்சி இருக்கின்றது என்ற மாயையில் அவர்கள் உள்ளனர். ஆனால் இனிவரும் தேர்தல்களில் கட்சியும், இரட்டை இலை சின்னம் வெற்றி பெறமுடியும் வேண்டும் என்று நினைப்பவர்களும் அங்கு உள்ளனர். அவர்கள் இனிமேல் சிந்திப்பார்கள். ஆர்.கே நகர் தேர்தல் மூலம் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பை மக்கள் எங்களுக்கு தந்துள்ளனர். 

இருபது ரூபாய் நோட்டை கொடுத்து கடன் சொன்னால் மக்கள் வாக்களிப்பார்களா? அப்படி என்றால் ரூ.6000 கொடுத்த அதிமுகவினரை மக்கள் ஆதரிக்கவில்லையே. மக்கள் என்மீது தான் நம்பிக்கை வைத்துள்ளனர். என்னை மாயமான் என்று கூறும் பன்னீர்செல்வம், அவர் எம்.எல்.ஏவாகவும், அமைச்சராகவும் ஆனது யாரால் என்பதை கூறவேண்டும். வாக்கு எண்ணிக்கை அன்று 2வது சுற்றிலேயே ரவுடிகள் மூலம் வாக்கு எந்திரங்களை உடைக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் திட்டமிட்டனர். பின்னர் எங்களின் கோரிக்கையை ஏற்று ராஜேஷ் லாக்கானி நடவடிக்கை எடுத்ததால் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது. மொத்தத்தில் தோல்வி அடைந்த விரக்தியில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் பேசுகின்றனர்” என்று கூறினார்.