டிரெண்டிங்

ராமலிங்கம் யார்? கேள்வி எழுப்பும் டிடிவி தினகரன்...

ராமலிங்கம் யார்? கேள்வி எழுப்பும் டிடிவி தினகரன்...

webteam

தினகரன் யார்? என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், ராமலிங்கம் யார்? என முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, சசிகலாவை சின்னம்மா என்று குறிப்பிட்டதுடன், வருமான வரி சோதனையின் பின்னணியில் முதலமைச்சர் இருப்பதாக தினகரன் கூறியிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, டிடிவி தினகரன் யார்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். 
 
இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “ஜெயலலிதா இருக்கும் திசையை நோக்கி வணங்கினேன் என்று கூறிய தலைவர்கள் எல்லாம் இன்று போயஸ் கார்டன் பக்கம் செல்வதற்கே பயப்படுகின்றனர். அமைச்சர்கள் பதவியில் இருப்பதால் தான் கட்சியை உடைக்கின்றனர். பதவியில் இல்லையென்றால் ஒழுங்காக சின்னம்மாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். ஒரு சிலர் செய்த தவறால் தான் போயஸ் கார்டனில் சோதனை என முதலமைச்சர் பழனிசாமி கூறுகிறார், அப்படியென்றால் ராமலிங்கம் யார்? சேகர் ரெட்டியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கைது செய்யப்பட்ட ராமலிங்கத்திடம் ஏன் இதுவரை சோதனை நடைபெறவில்லை. அவரிடமும் சோதனை நடைபெறும் என்ற பயத்தில் தான் எங்கள் குடும்பத்தையே எடப்பாடி பழனிசாமி வேண்டாம் என்கிறார். தினகன் எப்போது அரசியலுக்கு வந்தார் எனக்கேட்டுகும் பழனிசாமி, முதலமைச்சர் பதவிக்கே தகுதியற்றவர்” என்று கூறினார்.