திமுகவையும் அதிமுகவையும் வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “தீய சக்தியான திமுகவையும், துரோக கட்சியான அதிமுகவையும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதுதான் எங்களின் ஒரே கொள்கை. தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சியை, நல்லாட்சியை, வெளிப்படையான ஆட்சியை உருவாக்கி தருவதற்கான கூட்டணிதான் இது. சசிகலாவின் ஆதரவு எங்களுக்கு உண்டு” எனத் தெரிவித்தார்.