வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தரப்பு தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரிக்கு அலுவலகம் அமைக்கும் பணியை தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி பார்வையிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக நாளை வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய வருவோர் கார்களில் அணிவகுத்து வரக்கூடாது என்றும், 5 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்குள் வர வண்டும் என்றும் வேலுச்சாமி தெரிவித்தார். வேட்புமனுத் தாக்கல் செய்ய வருபவர்கள் ஒரு காரில் மட்டுமே வர வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தேர்தல் அதிகாரியை சந்தித்த டிடிவி தினகரன ஆதரவாளர் வெற்றிவேல், வரும் டிசம்பர் 1 ஆம் தேதி பிற்பகல் ஒரு மணிக்கு டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும் என கடிதம் அளித்துள்ளார்.