டிரெண்டிங்

இரட்டை இலை சின்னம்: டிடிவி தினகரன் தரப்பு மேல்முறையீடு

இரட்டை இலை சின்னம்: டிடிவி தினகரன் தரப்பு மேல்முறையீடு

webteam

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்சியின் சின்னம் மற்றும் பெயரை ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில் டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்து இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரட்டை இலை சின்னம் வழக்கில் நாங்கள் எடுத்த வைத்த வாதத்தை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சினனத்திற்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியினர் உரிமை கோரினர். அதேபோல் டிடிவி தினகரன் தரப்பும் சின்னத்திற்கு உரிமை கோரினார்கள். இரு அணிகள் தரப்பிலும் ஏராளமான ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இரு தரப்பினருடனும் சின்னம் தொடர்பான விசாரணை நிறைவு பெற்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டது.