டிரெண்டிங்

டிடிவி தினகரன் உருவபொம்மை எரிப்பு: எடப்பாடி ஆதரவாளர்கள் போராட்டம்

டிடிவி தினகரன் உருவபொம்மை எரிப்பு: எடப்பாடி ஆதரவாளர்கள் போராட்டம்

webteam

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்ததைக் கண்டித்து, அவரது உருவபொம்மை சேலத்தில் எரிக்கப்பட்டது.

சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை டிடிவி தினகரன் இன்று காலை நீக்கினார். அதனை கண்டிக்கும் விதமாக 100-க்கும் அதிகமானோர் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் கூடி தினகரனுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து தினகரன் உருவபொம்மையை தீயிட்டு எரிந்தனர்.

மேலும் சேலம் மாவட்டம் ‌அயோத்திபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் டிடிவி தினகரனின் உருவபொம்மையை எரித்து, முதலமைச்சர் பழனிசாமி அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‌அப்போது தினகரனுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.