டிரெண்டிங்

சுப்ரமணியன் சுவாமிக்கு நன்றி தெரிவித்த டிடிவி தினகரன்

சுப்ரமணியன் சுவாமிக்கு நன்றி தெரிவித்த டிடிவி தினகரன்

rajakannan

தேர்தலில் ஆதரவு அளித்த பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் 89013 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் மதுசூதனனை தோற்கடித்தார்.

இந்நிலையில் தேர்தல் வெற்றியை தொடர்ந்து பல தனப்பினர்க்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் தினகரன் நன்றி தெரிவித்துள்ளார். தினகரன் தனது ட்விட்டரில், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றிப் பெற வைத்த எனது அன்புக்குரிய ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கும், எனது வெற்றிக்காக இரவு பகல் பாராது அயராது பாடுபட்ட பாசமிகு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும், தோழமைகளுக்கும் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமக்கு வாழ்த்து தெரிவித்த கார்த்திக் ப.சிதம்பரம், நடிகர் விஷால் மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு தினகரன் நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு தினகரன் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெறுவார் என்று சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்து கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.