டிரெண்டிங்

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

webteam

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதன் மூலம் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே 19 எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள நிலையில், அறந்தாங்கி எம்எல்ஏ ரத்னசபாபதி மற்றும் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் ஆகிய இருவரும் புதிதாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மும்பையில் இருந்து ‌நாளை சென்னை வருகிறார். ஞாயிற்றன்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழகம் வர உள்ளதால், அவரை வரவேற்பதற்காக ஆளுநர் வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பபெறுவதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கடிதம் கொடுத்துள்ள நிலையிலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி கோரிக்கைகள் வந்துள்ள நிலையிலும் ஆளுநரின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.