டிடிவி தினகரனை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில்தான் சேர்க்க வேண்டும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெல்லமண்டி நடராஜன், “டிடிவி தினகரனை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில்தான் சேர்க்க வேண்டும். அதுமட்டும் தான் பாக்கி உள்ளது. மருத்துவமனையில் சேர்த்தால் சரியாகி விடும். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் மீண்டும் எப்படி கட்சியில் இணைந்தார்..? ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா படத்தை போட தைரியம் இல்லை. சசிகலா படத்தை போட்டால் மக்கள் மன்றம் புறக்கணித்து விடும் என்று தெரிந்துகொண்டே வேண்டுமென்றே சசிகலாவின் படத்தை புறக்கணித்த டிடிவி தினகரன் இன்று பதவி ஆசைக்காக சசிகலாவை கையிலெடுத்து பேசுகிறார். மறைந்த ஜெயலலிதாவின் பெயரை உச்சரிக்கக்கூட அவருக்கு அருகதை இல்லை” என்று தெரிவித்தார்.
ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில், அதிமுக-வின் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்களை அதிரடியாக நீக்கி அவர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நியமனம் செய்து வருகிறார் டிடிவி தினகரன். இந்த நிலையில் டிடிவி தினகரனை கடுமையாக சுற்றுலாத்துறை அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார்.