டிரெண்டிங்

நிரபராதி என நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்

நிரபராதி என நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்

webteam

நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் கைதான டிடிவி தினகரன் நேற்று டெல்லி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்த அவருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், ’நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன். இரட்டை இலை விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன். சசிகலாவை சந்தித்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பேன்’ என தெரிவித்தார்.