தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடவுள்ளது. இதில் திமுகவும் பங்கேற்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள டிடிவி தினகரன், தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் வரும் 24ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமரிடம் அந்த தீர்மானத்தை வழங்கி, தமிழகத்தின் உணர்வை பிரதிபலிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.