ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிமுகத்தில் உள்ள டிடிவி தினகரன் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இதுவரை 8 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8 சுற்றிலும் டிடிவி தினகரனே முன்னிலை வகித்து வருகிறார். ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் வெற்றி முகம் கண்ட டிடிவி தினகரன், சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது டிடிவி தினகரனின் ஏராளமான ஆதரவாளர்கள் அங்கு குவிந்திருந்தனர். அப்போது தினகரனின் ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பினர்.