டிரெண்டிங்

ஆர்.கே.நகர் முடிவுகள்: 7வது சுற்றிலும் டிடிவி தினகரன் முன்னிலை

ஆர்.கே.நகர் முடிவுகள்: 7வது சுற்றிலும் டிடிவி தினகரன் முன்னிலை

webteam

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 7வது சுற்று முடிவிலும் 34,346 வாக்குகள் பெற்று டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். 2வது இடத்தில் உள்ள மதுசூதனனை விட டிடிவி தினகரன் 16,925 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இதுவரை 7 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 7 சுற்றிலும் சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரனே முன்னிலை வகித்து வருகிறார்.

 7வது சுற்று முடிவில் டிடிவி தினகரன் 34,346 வாக்குகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.இரண்டாவது இடத்தில் 17,471 வாக்குகளுடன் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் உள்ளார். மதுசூதனனை விட இதுவரை டிடிவி தினகரன் 16,925 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் 9,206 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,509 வாக்குகளுடன் 4வது இடத்தில் உள்ளார். பாஜக 485 வாக்குகளை பெற்றுள்ளது. நோட்டாவுக்கு 925 வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து பாஜக நோட்டாவை விட குறைந்த வாக்குகளே பெற்று வருகிறது.