டிரெண்டிங்

முதல் சுற்று முடிவில் 5,339 வாக்குகள் பெற்று டிடிவி முன்னிலை

முதல் சுற்று முடிவில் 5,339 வாக்குகள் பெற்று டிடிவி முன்னிலை

Rasus

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல் சுற்று முடிவில் 5,339 வாக்குகள் பெற்று டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வருகிறார்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ பதவிக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாரதிய ஜனதா சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழகர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம், சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் 77.5 சதவித வாக்குகள் பதிவாகின.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் சுற்று முடிவில் 5,339 வாக்குகள் பெற்று சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வருகிறார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 2,738 வாக்குள் பெற்று இரண்டாவது இடத்திலும், 1,182 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் மருது கணேஷ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 258 வாக்குகளும், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 66 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.