ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் புதிய பேரவையை தொடங்கி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் மகத்தான வெற்றி பெற்றார். இதனையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவாக டிடிவி தினகரன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதனிடையே, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ளவர்கள் அதிமுகவிலிருந்து தொடர்ச்சியாக நீக்கப்பட்டு வருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் டிடிவி தினகரன் புதிய பேரவையை தொடங்கி அதில் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளார். பேரவைக்கு தனி அலுவலகம் அமைக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். தினகரனின் பேரவையில் சேர்வதற்கான உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.