டிரெண்டிங்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - டிடிவி அறிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - டிடிவி அறிவிப்பு

Rasus

மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என தனது புதிய அமைப்பின் பெயரை அறிவித்தார்.

மதுரை மாவட்டம் மேலூரில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் தனது புதிய அமைப்பின் பெயரை அறிவிப்பேன் என முன்னதாக கூறியிருந்தார். அதன்படி இன்று காலை பொதுக்கூட்டம் தொடங்கியது. இதற்காக பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

விழா மேடைக்கு வருகை புரிந்த டிடிவி தினகரன் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், தனது அமைப்பின் பெயரை அறிவித்து கொடியையும் அறிமுகம் செய்தார். ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்பதுதான் டிடிவி தினகரனின் புதிய அமைப்பின் பெயர். இதுமட்டுமில்லாமல் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதா இருப்பது போன்ற கொடியையும் டிடிவி தினகரன் அறிமுகம் செய்து வைத்தார்.