டிரெண்டிங்

“அரசாங்கம் தங்களுக்கு கீழ் உள்ள அமைப்புகளை தவறாக பயன்படுத்த கூடாது” : டி.டி.வி தினகரன்

“அரசாங்கம் தங்களுக்கு கீழ் உள்ள அமைப்புகளை தவறாக பயன்படுத்த கூடாது” : டி.டி.வி தினகரன்

webteam

திருச்சியில் அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது .இதில் பங்கேற்றுள்ள அ.ம.மு.க வின் துணை பொது செயலாளர் டி.டி.வி தினகரன்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது “காவல் துறை, சி.பி.ஐ உள்ளிட்டவை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகள் என்று சொல்லப்பட்டாலும் அவை அனைத்தும் அரசாங்கத்தின் அங்கங்கள் , மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி நடத்திய போராட்டம் தமிழ்நாட்டிலும் நடந்து இருக்க வேண்டும் என்கிற கமலின் கருத்து அவரின் சொந்த கருத்து, சி.பி.ஐ உள்ளிட்டவைக்கு சோதனை நடத்த உரிமை உள்ளது. அதில் உள்நோக்கம் இருக்கலாம், ஆனால் அவர்களின் செயல்பாட்டை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. அதே நேரத்தில் அரசாங்கம் தங்களுக்கு கீழ் உள்ள அமைப்புகளை தவறாக பயன்படுத்த கூடாது. ” என்றார். 

மேலும் பேசிய தினகரன் “ஒ.பன்னீர் செல்வத்தின் மகன் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றிருப்பது என்பது அவருக்கு என்றால் ஒரு நியாயம், மற்றவர்களுக்கு என்றால் ஒரு நியாயம் என்பதை காட்டுகிறது. குடும்பத்தின் பிடியிலிருந்து அ.தி.மு.க வை காப்பாற்றுவேன் என அவர் திடீரென கூறுவார். அவருடைய நியாயத்தை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். பாராளுமன்ற தேர்தலில் தேனி மக்கள் அவருக்கு பதில் அளிப்பார்கள்” என்றும் தெரிவித்தார்.