டிரெண்டிங்

டிடிவி - தீபா ஆதரவாளர்களிடையே தள்ளுமுள்ளு

டிடிவி - தீபா ஆதரவாளர்களிடையே தள்ளுமுள்ளு

webteam

பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும், தீபா ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு காலை 11 மணிக்கு டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் செய்துகொண்டிருந்தனர். அப்போது மரியாதை செலுத்துவதற்கு அங்கு தீபா வந்ததால் இரு தரப்பு அதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் இருதரப்பும் ஒருவாறு சமரசம் அடைந்து, தீபா அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து சுமார் 15 நிமிடங்கள் கழித்தே டிடிவி தினகரன் அங்கு வந்து மரியாதை செலுத்தினார்.