டிரெண்டிங்

குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முயற்சி - ஸ்டாலின் கண்டனம்

குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முயற்சி - ஸ்டாலின் கண்டனம்

rajakannan

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முயற்சி செய்வதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தகுதி நீக்கம் தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வரும், சபாநாயகரும் கூட்டு சேர்ந்து ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளனர். முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என கூறுவது கட்சித் தாவல் ஆகாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆளுநரிடம் மனு அளித்ததை வைத்து தகுதி நீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது. தவறான வழியில் சென்று சபாநாயகர் தனது மாண்பை கெடுத்துக் கொண்டார். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு ஆளுநரும் பொறுப்பேற்க வேண்டும். எடப்பாடி அரசின் முயற்சி மக்கள் மன்றத்தில் தோற்கடிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.