எம்ஜிஆர் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம் என்ற உறுதியுடன் விஜய் மக்கள் இயக்கத்தினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாநகராட்சி 36-வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் அருள்ராஜ் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய், அடுத்த எம்ஜிஆர் போன்று தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்வார் என்ற எண்ணத்தை வெளிப்படுத்த எம்ஜிஆர் போல் வேடம் அணிந்த நபரைக் கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நூதன பிரச்சாரம் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.