டிரெண்டிங்

வேலூர் மாநகராட்சி: 37வது வார்டில் திமுக திருநங்கை வேட்பாளர் வெற்றி

வேலூர் மாநகராட்சி: 37வது வார்டில் திமுக திருநங்கை வேட்பாளர் வெற்றி

JustinDurai

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 37-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வேலூர் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் 18 சுற்றுகளாக எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022