முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்கக்கோரும் தங்களின் போராட்டத்திற்கு நாளை நல்ல முடிவு கிடைக்கும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், "முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அவரை மாற்றி விட்டு சபாநாயகராக உள்ள தனபால் முதலமைச்சராக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அச்சத்தின் காரணமாகவே ஈபிஎஸ்., ஒ.பி.எஸ். அணிகள் இணைந்துள்ளனர். இதுதொடர்பாக நாங்கள் நாளை தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து மீண்டும் வலியுறுத்த உள்ளோம். ஈபிஎஸ்., ஒ.பி.எஸ் இணைப்பால் யாருக்கும் லாபம் இல்லை’ என்று கூறினார்.